/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு
/
அரசு பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு
ADDED : செப் 22, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் முறைகளையும் கேட்டறிந்தார்.
பள்ளிக்கு அதிக நாட்கள் வராமல் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து விடுப்பு எடுக்காமல் வர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின், மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பள்ளி தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சத்துணவு கூடத்தை பார்வையிட்டு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ், துணை ஆய்வாளர் சரவணன், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.