/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டரிடம் சி.இ.ஓ., வாழ்த்து
/
கலெக்டரிடம் சி.இ.ஓ., வாழ்த்து
ADDED : ஆக 06, 2025 12:45 AM

கள்ளக்குறிச்சி; அறிவியல் ஆய்வு மையம் அமைத்ததற்காக பாராட்டு கேடயம் பெற்ற சி.இ.ஓ., கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், கல்வராயன்மலை வட்டாரத்தில் மாநில திட்டக்குழு வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்தாண்டு முதல் ரூ.4 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ரூ.4 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட சிறந்த செயல்பாடுகளை எடுத்துரைக்கும் வகையில் கடந்த 1ம் தேதி சென்னையில் நடந்த கருத்தரங்கில், அனைத்து மாவட்ட சிறந்த செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம், கல்வராயன்மலை வட்டாரங்களில் அப்துல்கலாம் அறிவியல் ஆய்வு மையம் சிறப்பாக அமைத்ததற்காக சி.இ.ஓ., கார்த்திகாவுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இந்த கேடயத்தை கலெக்டர் பிரசாந்திடம் காண்பித்து சி.இ.ஓ., கார்த்திகா வாழ்த்துப் பெற்றார்.