ADDED : மே 07, 2026 04:41 AM
மூங்கில்துறைப்பட்டு: மே 7-: மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் துாய்மை பணியாளரிடம் 42 கிராம் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி சித்ரா, 52; துாய்மை பணியாளர். இவர், நேற்று காலை 10.15 மணியளவில் புதுப்பட்டு கிராமத்தில் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக தலைப்பாகை கட்டியவாறு பைக்கில் வந்த மர்ம நபர், சித்ரா அணிந்திருந்த 42 கிராம் தங்க செயினை பறித்துகொண்டு தப்பி சென்றார்.
சித்ரா முயற்சித்தும் மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சித்ரா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டபகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
