ADDED : மே 26, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் 3 சவரன் தாலிச்செயினை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சசிகலா, 32; இவர், நேற்று மதியம் 2:00 மணியளவில் திருநாவலுார் வயல்வெளி சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை அறுத்துச் சென்றனர்.
இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.