
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே தேர் திருவிழாவில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் புதுப்பட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி கடைசி புதன் மற்றும் சித்திரை முதல் புதன் கிழமையில், திருவிழா நடக்கும். இதையொட்டி, இந்தாண்டிற்கான விழா கடந்த மார்ச் மாத இறுதியில் கொடியேற்றுத்துடன் துவங்கியது.
தொடர்ந்து கடந்த 2ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி., தேவராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.