/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
/
ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம் கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ADDED : டிச 26, 2025 05:09 AM
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில் அரசின் அனைத்து துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு நவ., மாதம் துவக்கி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலக சொந்த கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால், கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் சில ஆண்டுகள் இடையூறு ஏற்பட்டது.
இதனையடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு, கலெக்டர் அலுவலக அமைவிடம் தொடர்பான வழக்குக்கு தீர்வு காணப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த, 2024ம் ஆண்டு செப்., 16ம் தேதி மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடர்ந்து, 35.18 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில், 8 தளங்களை கொண்டு அரசின் அனைத்து துறை அலுவலகங்களும், ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சிக்கு இன்று வருகைபுரிந்து புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
புதிய கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் மாவட்ட கருவூல அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளி அலுவலகம், பத்திரிக்கையாளர் அறை, குறைதீர்ப்பு கூட்ட அரங்கு, தபால் அலுவலகம், பதிவேட்டு அறை ஆகியவை செயல்படவுள்ளன.
அதேபோல் முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தேர்தல் அலுவலகம், திட்ட இயக்குனர் அலுவலகம், வருவாய் அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம் ஆகியவை செயல்பட உள்ளன.
இரண்டாம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல வாரியம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட பள்ளி நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், கனிமவள உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் இயங்கவிருக்கின்றன.
மேலும், மூன்றாம் தளத்தில் கலெக்டர் அறை, கூட்ட அரங்கு, காணொலி காட்சி அறை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது), கலந்தாய்வு அறை, எல்காட், நீக், வருவாய் துறை அலுவலங்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறைகள் செயல்படவுள்ளன.
நான்காம் தளத்தில் பாஸ்போர்ட் அலுவலகம், முன்னாள் ராணுவத்தினர் நலவாரியம், கைத்தறி அலுவலகம், தேர்தல் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சி கழகம், தணிக்கை அலுவலகம், பஞ்சாயத்து, உள்ளூர் திட்டமிடல், நில அளவையர் அலுவலகம், சுகாதார துறை, உதவி இயக்குனர் மீன்வளத்துறை, கலால் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.
அதேபோல் 5ம் தளத்தில் கூட்டுறவுத்துறை, புள்ளியல் துறை, மாசுக் கட்டுபாட்டு வாரியம், அரசு கேபிள் டிவி, வீட்டு வசதி வாரியம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், சத்துணவு துறை, குடிசை மாற்று வாரியம், குழந்தைகள் நல வாரியம், தொழிலாளர் நலத்துறை, சி.இ.ஓ., அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் செயல்படவுள்ளன.
மேலும், 6 ம் தளத்தில் உணவு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை கட்டடம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, மகளிர் சுய உதவிக்குழு, மாவட்ட நுாலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பட்டுவளர்ப்பு துறை, கால்நடைத்துறை, மகளிர் உடற்பயிற்சி கூடம், ஆடவர் உடற்பயிற்சி கூடம், ஆவின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளன.
7 ம் தளத்தில் சுற்றுலாத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தொழில் துறை, வேளாண் விற்பனை கழகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்கள் செயல்படவுள்ளன.

