/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் : சிறப்பு முகாம் கூட்டம்
/
மக்களுடன் முதல்வர் : சிறப்பு முகாம் கூட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:27 AM

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகத்தில், ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட சிறப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் சிறப்பு முகாம்கள் வரும், 10, 11 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியிலும், 13, 14 ஆகிய நாட்களில் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியிலும், 24, 25 ஆகிய நாட்களில் சங்கராபுரம் சட்டசபை தொகுதியிலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடக்கிறது.
இதற்காக துறை வாரியாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இம்முகாமில் பயனாளிகளுக்கு அதிக நலத்திட்ட உதவிகள் வழங்கவும், விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்பாக மேற்கொள்ளவும், பயனாளிகளின் வருகை, இருக்கை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அத்துடன் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.