/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்
/
சங்கராபுரம் தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜூன் 15, 2025 10:43 PM
கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் வரும் 24, 25 தேதிகளில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் சங்கராபுரம் சட்டசபை தொகுதிகுட்பட்ட கிராம ஊராட்சிகளில் வரும் 24ம் தேதி 4 இடங்களில் நடக்கிறது.
கல்வராயன்மலை ஒன்றியத்தில் வெள்ளிமலை, கண்டிக்கல், வாழப்பாடி, வன்னியூர், மொழிப்பட்டு பகுதிகளுக்கு வெள்ளிமலை ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. முண்டியூர், வண்டகப்பாடி, தொரடிப்பட்டு, எருக்கம்பட்டு பகுதிகளுக்கு தொரடிப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
ஆரம்பூண்டி, வாரம், உப்பூர், தொரங்கூர் பகுதிகளுக்கு ஆரம்பூண்டி ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. அரவங்காடு, மேலாத்துக்குழி, கீழாத்துக்குழி, மணியார்பாளையம் பகுதிகளுக்கு மணியார்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
அதேபோல் 25ம் தேதி 6 முகாம்களில் நடக்கிறது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் வஞ்சிக்குழி, பெரும்பூர், மூலக்காடு, வாழைக்குழி பகுதிகளுக்கு வஞ்சிக்குழி ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. ஆலனுார், சேராப்பட்டு, குறும்பலுார் பகுதிகளுக்கு சேராப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
கூடாரம், கிளாக்காடு, கள்ளிப்பாறை, வில்வத்தி, பெருமாநத்தம் பகுதிகளுக்கு கிளாக்காடு ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. வெங்கோடு, க.எருக்கம்பட்டு, மொட்டையனுார், வெள்ளரிக்காடு ஆகிய பகுதிகளுக்கு வெங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் திருக்கனங்கூர், பொன்பரபட்டு, செம்படாக்குறிச்சி, மோகூர், மோ.வன்னஞ்சூர், சோமாண்டார்குடி பகுதிகளுக்கு க.அலம்பலம் ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. சங்கராபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த தியாகராஜபுரம், ஊராங்கனி, சவுந்தரவல்லி, அரசம்பட்டு, கொசப்பாடி, செம்பரம்பட்டு, பொய்குணம் பகுதிகளுக்கு பூட்டை ஊராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
முகாமில் 15 துறைகளின் பட்டியலிடப்பட்ட 44 சேவைகள் தொடர்பான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதற்குண்டான ஆவணங்களை இணைத்து மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.