/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம்; 85 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

ADDED : ஜூலை 08, 2025 10:49 PM

ரிஷிவந்தியம்; முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 85 பயனாளிகளுக்கு, ரூ. 2.29 கோடி மதிப்பில் வீடு கட்டுவதிற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், அசோக்குமார், ராஜவேல், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
ஊரகப்பகுதியில் கடந்த 2001ம் ஆண்டுகளுக்கு முன் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு, புதிய வீடு கட்ட ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 85 பயனாளிகளுக்கு, ரூ.2.29 கோடி மதிப்பிலான வீடு கட்டுவதிற்கான பணி ஆணைகளை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.