/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வரின் தாயுமானவர் திட்டம் கச்சிராயபாளையத்தில் துவக்கம்
/
முதல்வரின் தாயுமானவர் திட்டம் கச்சிராயபாளையத்தில் துவக்கம்
முதல்வரின் தாயுமானவர் திட்டம் கச்சிராயபாளையத்தில் துவக்கம்
முதல்வரின் தாயுமானவர் திட்டம் கச்சிராயபாளையத்தில் துவக்கம்
ADDED : ஆக 12, 2025 11:11 PM

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமை பொருள் வழங்கும் வாகனத்தை கலெக்டர், எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலன் கருதி, அவர்களது வீட்டிற்கே சென்று குடிமை பொருட்களை விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவர் திட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் குடிமை பொருள் வழங்கும் வாகனத்தை கொடியசைத்து வைத்து பேசியதாவது;
மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என 22,107 ரேஷன் கார்டு உள்ளது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2வது வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இவர்களது வீட்டிற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கப்படும். இதற்காக 322 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து முதியவர்களின் வீட்டிற்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் சுகந்தலதா மற்றும் பலர் க லந்து கொண்ட னர்.