தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குழந்தை இறப்பு

 குழந்தை இறப்பு

 குழந்தை இறப்பு


ADDED : டிச 23, 2025 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிறந்து 2 நாட்களில் இறந்த பச்சிளம் குழந்தை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி குழந்தை பிறந்தது. குறைமாதத்தில் உடல்நிலை சரியில்லாமல் பிறந்த பெண் குழந்தை, சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி இறந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, திருமணமாகாத பெண் கர்ப்பமானது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us