/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
/
தனியார் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
தனியார் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
தனியார் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
ADDED : ஜூன் 24, 2025 07:09 AM

உளுந்துார்பேட்டை,ஜூன் 24-
உளுந்துார்பேட்டை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ் சக்கரத்தில் சிக்கி இரண்டரை வயது குழந்தை இறந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த பெரியமாரனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார், 32; விவசாயி.
இவர், நேற்று காலை களமரூதுாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பெரியமாரனோடைக்கு செல்வதற்காக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்ட ரில் சென்றார்.
அப்போது தனது இரண்டரை வயது மகன் தன்வேந்தனை ஸ்கூட்ட ரில் அமர வைத்து அழைத்துச் சென்றார்.
9:00 மணியளவில் ஒரத்துார் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மினி பஸ்சை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது மினி பஸ் திடீரென பிரேக் போட்டதால், பைக் மோதியதில் தவறி கீழே விழுந்த குழந்தை தன்வேந்தன், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தது.
விபத்து குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.