/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ
/
குழந்தை திருமணம்; 12 பேர் மீது போக்சோ
ADDED : ஏப் 30, 2025 07:13 AM
கள்ளக்குறிச்சி; திருக்கோவிலுார் அருகே குழந்தை திருமணம் செய்த கணவர் உள்ளிட்ட, 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடியை சேர்ந்தவர் திருவேங்கடம், 35; இவரது மனைவி சவுந்தர்யா,23; இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது.
திருவேங்கடத்தின் குடும்பத்தினர் பணம் கேட்டு தினமும் சவுந்தர்யாவை கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சவுந்தர்யாவை குழந்தை திருமணம் செய்த கணவர் திருவேங்கடம் மீதும், திருமணம் செய்து வைத்த மாமனார் ஆதிசிவம், மாமியார் கவுசல்யா, தந்தை குமார், தாய் குணா மற்றும் உறவினர்கள் 7 பேர் என மொத்தமாக 12 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

