/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு கலெக்டர் அறிவுறுத்தல்
/
குழந்தைகள் பாதுகாப்பு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 06:18 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் நிதி ஆதரவு மற்றும் தற்காலிக குழந்தை வளர்ப்பு பராமரிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பணிகள், சட்டங்களை முறையாக அமல்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புகார்கள் வந்தால், உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.