/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : செப் 25, 2024 07:07 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் குழுந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கி, கூட்டத்தை துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியன், உதவி ஆசிரியர் பாலு, கிராம சுகாதார செவிலியர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிராமங்களில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கும் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கும் திருமணம் நடப்பது தெரியவந்தால் மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
கிராமங்களில் குழுந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்தால் 1098 க்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.