/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : மார் 29, 2025 05:10 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு துறை சார்பில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. சேர்மன் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷ்னர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, தொழிலாளர் நல அலுவலர் சிவக்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் பேசினர். இந்த கூட்டத்தில், இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கை குறித்து நாள்தோறும் கண்காணித்து நட்பு ரீதியாக பேச முன்வர வேண்டும். குழந்தைகள் முன்பாக மது அருந்துவது, சண்டையிடுவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கையை தடுக்க, போலீஸ் துறை, மாவட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறைக்கு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.