/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்கள்; நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்
/
ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்கள்; நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்
ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்கள்; நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்
ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்கள்; நிவாரணம் கேட்டு மக்கள் மறியல்
ADDED : அக் 05, 2024 04:59 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே ஏரியில் மூழ்கி இறந்த சிறுவர்களுக்கு நிவாரண தொகை அகேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியை சேர்ந்தவர்கள் முருகன் மகன்கள் ஜிவிதரன், 10; தர்ஷன், 8; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் ஹரிகரன், 11; மூவரும் நேற்று முன்தினம் கோட்டமருதுார் பெரிய ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்தனர்.
சிறுவர்களின் குடும்பத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறாததை கண்டித்தும், இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க அரசு உத்தரவிடக்கோரி கிராம மக்கள் நேற்று மாலை 4:50 மணிக்கு மணம்பூண்டி மேட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஆர்.டி.ஓ., ஷாகுல் ஹமீத், தாசில்தார் கிருஷ்ணதாஸ், ஏ.டி.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று மாலை 5:20 மணிக்கு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.