
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் தின விழாவை கலெக்டர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்தினாளிகள் நலத்துறை சார்பில் குழந்தை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி, அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி கொண்டாடினர். விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், கருணை இல்ல தாளாளர் சிவசூரியன் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.