நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை இந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ் முற்றம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செண்பகவல்லி தலைமை தாங்கினார். மகிழ் மற்றும் குழுக்களுக்கு பொறுப்பாசிரியராக தனசிங் பதவி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜீரணபேகம், செண்பகம், ஸ்டெல்லா, புனித எமரால்ட், புஷ்பா, ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.