/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பஸ் நிலையம், வாரச்சந்தை கட்டுமான பணி : கலெக்டர் ஆய்வு
/
சின்னசேலம் பஸ் நிலையம், வாரச்சந்தை கட்டுமான பணி : கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் பஸ் நிலையம், வாரச்சந்தை கட்டுமான பணி : கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் பஸ் நிலையம், வாரச்சந்தை கட்டுமான பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2025 10:06 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் பஸ் நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய தினசரி வாரச்சந்தை கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
சின்னசேலம் பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இடவசதி இன்றி பொதுமக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் பஸ் இயக்குபவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் நிலைய பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு ரூ.1.98 கோடி மதிப்பில், பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான நடந்து வருகிறது.
அதில் பஸ் நிலைய ஓடுதளம், பயணியர் நிழற்கூடம், தாய்மார் பாலுட்டும் அறை, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, இலவச கழிப்பறை மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகிறது. அதேபோல் பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தன் கீழ் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிய தினசரி மற்றும் வாரச்சந்தை கட்டுமான பணி நடந்து வருகிறது.
பஸ் நிலைய விரிவாக்கம் மற்றும் வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், செயல் அலுவலர் கணேசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.