/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : டிச 22, 2025 06:04 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அம்மையகரத்தில் நேற்று ந டந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் சோலைமுத்து, வழக்கறிஞர் சங்க தலைவர் சேகர், கிளை செயலாளர் மாயகண்ணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி பங்கேற்று பேசியதாவது; வரும் 26ம் தேதி கள்ளக்குறிச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கும் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிப்பது, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நபர்களையும், புதிய வாக்காளர்களையும் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவி செய்ய வேண்டும், வரும் தேர்தலில் 7 வது முறையாக வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சி அமைக்க ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் சுதாமணிகண்டன், பெரியசாமி, முருகேசன், கிளை செயலாளர்கள் தனபால், வரதன், ராஜா, ராஜிவ்காந்தி, துரைமுருகன், வெங்கடாசலம், இளைஞரணி அமைப்பாளர் ஜெகன், துணை அமைப்பாளர்கள் எழில்வசந்தன், மணிபாரதி, மதியழகன், வெங்கடேசன், எழிலரசன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய துணை செயலாளர் தமிழ்செல்வி கோவிந்தன் நன்றி கூறினார்.

