/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் ரயில் நிலையம் 'ஜங்ஷனாக' மாறுவது... எப்போது; 4 ஆண்டுக்கு முன் பணி துவங்கியும் மாற்றமில்லை
/
சின்னசேலம் ரயில் நிலையம் 'ஜங்ஷனாக' மாறுவது... எப்போது; 4 ஆண்டுக்கு முன் பணி துவங்கியும் மாற்றமில்லை
சின்னசேலம் ரயில் நிலையம் 'ஜங்ஷனாக' மாறுவது... எப்போது; 4 ஆண்டுக்கு முன் பணி துவங்கியும் மாற்றமில்லை
சின்னசேலம் ரயில் நிலையம் 'ஜங்ஷனாக' மாறுவது... எப்போது; 4 ஆண்டுக்கு முன் பணி துவங்கியும் மாற்றமில்லை
ADDED : ஜன 30, 2024 06:15 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ரயில் நிலையம் ஜங்ஷனாக (சந்திப்பு) மாற்றுவதற்காக நடந்த பணிகள் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றும் இதுவரை முன்னேற்றம் இல்லாமல் நீடித்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான ரயில் நிலையமாக சின்னசேலம் உள்ளது. 1915ம் ஆண்டில் துவக்கப்பட்ட சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் சென்னை, சேலம், நாகப்பட்டினம், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள மூன்று ரயில் பாதைகள் வழியாக தினமும் 9 பயணிகள் ரயில்களும், குறிப்பிட்ட நாட்களில் கூடுதலாக 4 பயணிகள் ரயில்களும் செல்கின்றன.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி, உர மூட்டைகள் கொண்டு வரப்பட்டு நான்கு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டமாக உயர்ந்ததையொட்டி சின்னசேலம் ரயில் நிலையம் விரைவில் ஜங்ஷனாக மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏராளமான ரயில்கள் சின்னசேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்களில் வருகை அதிகரித்தால் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்பதால் சின்னசேலம் ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி கடந்த 2020ம் ஆண்டு துவங்கியது.
நடைமேடைகளின் உயரம் ஒரு அடி உயர்த்தப்பட்டது. மேலும் சுற்றுச்சுவர், மேற்கூரை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து முடிந்தது. அத்துடன் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதை பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
ஆனால் சின்னசேலம் ரயில் நிலையம் ஜங்ஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு அதற்கான முன்னேற்றம் எதுவும் இல்லாமல் நீடித்து வருவது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
விரைவில் சின்னசேலம் ரயில் நிலையத்தை ஜங்ஷனாக்கவும், கள்ளக்குறிச்சி ரயில் பாதை திட்ட பணிகளை விறைவுபடுத்தவும் தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.