/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
/
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : மே 24, 2025 12:08 AM

சின்னசேலம்: சின்னசேலத்தில் குடிநீர் வினியோகம் கோரி, பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம் அடுத்த ராயர்பாளையம் சாலை அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அங்கு, 72 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அந்த முகாமிற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர், முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் பல தடவை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம், முகாமைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.