/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 23, 2024 10:42 PM

கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். இயக்குனர்கள் மனோபாலா, சிஞ்சுமனோபாலா வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பள்ளியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பயிலும் மழலையர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தனர். கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் ராகேல், ஜாய்ஸ் மேரி, ரோஜிட்டா மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஜீசஸ்சுஜி நன்றி கூறினார்.