ஸ்கேட்டிங்கில் அசத்தும் திருக்கோவிலுார் மாணவர்கள்
ஸ்கேட்டிங்கில் அசத்தும் திருக்கோவிலுார் மாணவர்கள்
ADDED : அக் 01, 2026 05:09 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஸ்கேட்டிங்கில் அசத்தும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.
திருக்கோவிலுாரில் முகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் 60க் கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
காலையில் திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 6:30 மணி முதல் 8:00 மணி வரையிலும், மாலையில் சந்தப்பேட்டையில் உள்ள திருச்செந்துார் கார்டனில் 4:30 மணி முதல் 7:00 மணி வரையிலும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 60க் கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சமீபத்தில் மாவட்ட அளவில் கள்ளக்குறிச்சியில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, முதல் மற்றும் மூன்றாம் பரிசினை இம்மாணவர்கள் தட்டிச் சென்றனர்.
இந்த மாதம் 29ம் தேதி தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், சு.வாளவெட்டிக்கு 11 கிலோமீட்டரை வெறும் 15 நிமிடத்தில் கடக்கின்றனர். வாரத்திற்கு மூன்று முறை இதற்கான பயிற்சியை மாணவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கோவிலுார் நகரின் பல்வேறு தெருக்களிலும் மாணவர்கள் சக்கரத்தை மாட்டிக் கொண்டு வேகமாக பயணிப்பதை ஆச்சரியமுடன் பார்க்கும் நிகழ்விற்கு பின்னால் இந்த அகாடமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முயன்றால் முடியாதது இல்லை, வானம் கூட வசப்படும் என்ற பழமொழிக்கேற்ப மாணவர்களின் இந்த சாகச நிகழ்வு பெற்றோர்களை மட்டுமல்ல காண்பவர்களையும் பிரமிக்க செய்கிறது.
