/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு கிராமத்தினரிடையே மோதல்: 13 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது
/
இரு கிராமத்தினரிடையே மோதல்: 13 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது
இரு கிராமத்தினரிடையே மோதல்: 13 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது
இரு கிராமத்தினரிடையே மோதல்: 13 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது
ADDED : ஆக 18, 2025 12:31 AM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே இரு தரப்பினர் மோதி கொண்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த டி.குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக நேற்று முன்தினம் சாலையோரம் நின்று உண்டியல் வசூல் செய்து கொண்டிருந்தனர்.
அவ்வழியாகச் சென்ற எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தஸ்தகீர் மகன் இப்ராஹிம், உண்டியல் வசூல் செய்த 17 வயது சிறுவனை தாக்கி விட்டு எடப்பாளையம் சென்று சிறிது நேரத்தில் அவரது மகன் யாசர், முகமது பைரோஸ், 38; பாஷா மகன் ரபீக், 23; பாபு மகன் ஜாபர், 21; நசீர் மகன் பாஜன், 25; மற்றும் சிலரை அழைத்து வந்து சம்பவ இடத்தில் நின்று இருந்த டி.குன்னத்துரை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிலரை சரமாரியாக தாக்கினர்.
இந்த மோதலில் இப்ராஹிம்மை குன்னத்துாரை சேர்ந்த காளிதாஸ், இத்தியாஸ், குணா பெயர் விலாசம் தெரியாத மற்றும் சிலர் திருப்பித் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
இது குறித்து இரு தரப்பையும் சேர்ந்த 13 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து, எடப்பாளையத்தைச் சேர்ந்த முகமது பைரோஸ், 38; ரபிக், 23; ஜாபர், 21; பாஜன், 25; ஆகியோரை கைது செய்தனர்.