தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிணற்றில் தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவர் பலி


ADDED : ஆக 31, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கிணற்றில் எட்டிப்பார்த்தபோது தவறி விழுந்து பள்ளி மாணவர் இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த பழையவண்ணகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். அவரது மனைவி ஜோதி. கிணறு வெட்டும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் சஞ்சய், 15; எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இவரது பெற்றோர், புகைப்பட்டி கிராமத்தில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5:30 மணியளவில் அங்கு சென்ற சஞ்சய் 40 அடி ஆழமுள்ள கிணற்றை எட்டிப்பார்த்தார். அப்போது கிண்றில் தவறி விழுந்து, படுகாயமடைந்தார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையல் சேர்த்தனர். அங்கு அவர், இரவு 9:00 மணியளவில் இறந்தார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us