தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம்

பருவநிலை மாற்றம் விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : நவ 08, 2024 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை-அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.

கல்லுாரி துறை தலைவர்கள் பிரவீனா, சக்திபிருந்தா, நர்கீஸ்பேகம், சித்ராதேவி, நுாலகர் கவுசல்யா முன்னிலை வகித்தனர். நுாலகர் மஞ்சு வரவேற்றார். கள்ளக்குறிச்சி பறவை ஆர்வலர் குயிலி அமைப்பின் நிறுவனர் கீர்த்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பருவ நிலை மாற்றம் குறித்து விளக்கவுரை வழங்கினார்.

வேலுார் திருவள்ளுவர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் இந்திலி தெய்வீகன், மேலுார் கலா சாமிதுரை. சுற்றுச்சூழல் ஆர்வலர் சத்தியமூர்த்தி, வன ஆர்வலர் ரஞ்சிதா, வன பாதுகாவலர் கலைமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் துாய்மைப்பணியும், என்.சி.சி., சார்பில் ஏமப்பேர் பூங்காவில் நடைப்பயிற்சி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us