/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டோல்கேட்டில் மூடிக்கிடந்த கழிவறைகள் திறப்பு
/
டோல்கேட்டில் மூடிக்கிடந்த கழிவறைகள் திறப்பு
ADDED : நவ 05, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட்டில் மூடிக்கிடந்த கழிவறைகள் தினமலர் செய்தி எதிரொலியால் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட்டில், சென்னை மார்க்க சாலையோரம் உள்ள கழிப்பறைகள் சில மாதங்களாக பராமரிப்பு என்ற பெயரில் மூடிக்கிடந்தன. வெகு தொலைவில் இருந்து வாகனத்தில் வரும் பயணிகள் கழிவறை இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து தினமலர் நாளிதழ் படத்துடன் விரிவான செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உடனடியாக கழிவறைகள் முழுமையாக சரி செய்து உடனடியாக வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.

