ADDED : மார் 07, 2024 11:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் கோ - ஆப்டெக்ஸ் கிளை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, கலெக்டர் ஷ்ர்வன்குமார் தலைமை தாங்கி புதிய கிளையை திறந்து வைத்தார். உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

