/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ட்ரோன் ஸ்பிரேயரை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
/
ட்ரோன் ஸ்பிரேயரை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
ட்ரோன் ஸ்பிரேயரை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
ட்ரோன் ஸ்பிரேயரை பயன்படுத்த விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
ADDED : ஜன 20, 2025 04:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள ட்ரோன் ஸ்பிரேயரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தின்கீழ் சங்கராபுரம் தாலுகா தேவபாண்டலம் ஊராட்சி சுய உதவிக்குழு உறுப்பினர் நந்தினி, மொபைல்- 95000 11647, உளுந்தூர்பேட்டை தாலுகா காட்டுச்செல்லுார் ஊராட்சி சுயஉதவிக்குழு உறுப்பினர் சரண்யா, மொபைல்-- 98842 47762. ஆகிய இரண்டு பயனாளிகளுக்கு ட்ரோன் ஸ்பிரேயர் வழங்கப்பட்டுள்ளது.
ட்ரோன் ஸ்பிரேயரானது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. துல்லியமான பயன்பாட்டை உறுதி செய்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ட்ரோன் மூலம் நவீன பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.