/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழில்முனைவோராக மாற வேண்டும் திருநங்கைகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : மே 02, 2025 07:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருநங்கைகள் பங்கேற்று, கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலினை செய்து, தகுதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட தொழில் மையம் சார்பில் திருநங்கைகளுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டம் குறித்தும், அதை பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தகுதிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
இத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று திருநங்கைகள் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.