/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் விழிப்புணர்வு
/
கள்ளக்குறிச்சியில் கலெக்டர் விழிப்புணர்வு
ADDED : அக் 28, 2024 10:36 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் அதனைப் பெரும் முறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் அறிந்து, நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.