/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
/
பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
ADDED : செப் 30, 2025 06:36 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், பேரணி, பிரசாரம் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்பாட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பிரசாரம் நடத்துவதற்கு நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து இடையூறு ஏற்படும் இடங்களை தவிர்த்து தேர்வு செய்யப்பட்ட இடங்களின் விவரம் அரசியல் கட்சி பிரிதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த இடங்கள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். வரையறுக்கப்பட்ட இடங்களில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்ட இடங்கள் மற்றும் சில இடங்களுக்குப் பதிலாக மாற்று இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
மாற்று இடங்கள் குறித்து கள ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில் அனைத்துக் கட்சிகளும் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.