/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விருது பெற்றதற்கு கலெக்டர் பாராட்டு

ADDED : ஜூலை 12, 2025 11:24 PM

கள்ளக்குறிச்சி: டில்லியில் நடந்த விழாவில் சிறப்பு விருது பெற்ற கள்ளக்குறிச்சி 2வது கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளம், ஆண்டு தோறும் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2023 - 24ம் ஆண்டில் கரும்புத் துறையின் சிறப்பான முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக, கள்ளக்குறிச்சி 2வது கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, டில்லியில் நடந்த விழாவில் நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் விருது வழங்கினார்.
தமிழ்நாடு சர்க்கரை துறை இயக்குநர் அன்பழகன், கள்ளக்குறிச்சி 2வது கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் யோகவிஷ்ணு ஆகியோர் விருது பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருதினை ஆலையின் செயலாட்சியர் யோகவிஷ்ணு, கலெக்டர் பிரசாந்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.