/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை
/
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்; அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஜன 29, 2025 06:45 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை 20 கிராமங்களில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசுகையில், 'பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினர். இத்திட்டத்தின் கீழ் 15 அரசு துறைகள் சார்பில் 44 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இரு கட்டமாக நடத்திய முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.
தற்போது, மூன்றாம் கட்டமாக விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த அரசுஉத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டசபை தொகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்க கூடிய 20 கிராமங்களில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.