/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்சாரத்தில் இயங்கும் புல் நறுக்கும் கருவி 90 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கல்

ADDED : ஆக 07, 2025 11:54 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால்நடை மருத்துவமனையில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் விஷ்ணுகந்தன், தலைமை மருத்துவர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 504 ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் கறவை மாடு, ஆடு வைத்து பராமரிக்கும் 90 பயனாளிகளுக்கு, ரூ.13 லட்சத்து 5 ஆயிரத்து 360- மதிப்பில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கருவி பயன்படுத்தி புற்களை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி வழங்குவதன் மூலம் மாடு, ஆடுகள் ஆரோக்கியமாக இருக்கும், பால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கால்நடை துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.