/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 17, 2024 02:59 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டபை தொகுதிகளில் வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வரும் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணி நடக்கிறது.
இதற்காக 637 மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று 16 மற்றும் இன்று 17ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இதில் பெயர் சேர்த் தல், நீக்கம், திருத்தம் மற்றும் இதர பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்கீரனுார், விளம் பார், எரவார், மேலுார், இந்திலி, நல்லாத்துார், தொட்டியம், எலியத்துார், கடத்துார் கிராமங்களில் ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாமை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான படிவங்கள், பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்து, புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்த்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், சிறப்பு முகாமில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வருகை, பெறப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை தங்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார். ஆய்வின் போது தாசில்தார்கள் பசுபதி, மனோஜ் முனியன் உடனிருந்தனர்.