/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நரிக்குறவர்களுக்கான கான்கிரீட் வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
/
நரிக்குறவர்களுக்கான கான்கிரீட் வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
நரிக்குறவர்களுக்கான கான்கிரீட் வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
நரிக்குறவர்களுக்கான கான்கிரீட் வீடு கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 22, 2025 11:35 PM

திருக்கோவிலூர்; முகையூரில் நரிக்குறவ மக்களுக்கு அரசின் சார்பிலான கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டப் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முகையூர் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் 15 கான்கிரீட் வீடுகள் நரிக்குறவர்களுக்கு கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, கட்டுமான பொருட்களின் தரம், அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறையின் படி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும் போது,'' முகையூரில் 15 வீடுகளும், வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலையூரில் 12 வீடுகள், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆலங்குப்பத்தில் 12 வீடுகள் என நரிக்குறவர் இன மக்களுக்கு 39 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் ஜெகநாதன், சண்முகம், ஊராட்சி தலைவர் லூயிஸ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷ் உடன் இருந்தனர்.