/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணையில் கலெக்டர் ஆய்வு
/
மணிமுக்தா அணையில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 06, 2025 10:30 PM

கள்ளக்குறிச்சி; மணிமுக்தா அணையில், புதிய ெஷட்டர்கள் அமைத்து, அதிகளவில் தண்ணீர் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை மூலம், 11 கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் பழைய ெஷட்டர்கள் பழுதடைந்து கதவுகள் வழியே தண்ணீர் கசிந்து வருகிறது. இதையடுத்து அங்கு கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் அவர் கூறுகையில், 'பழுதடைந்த 3 பழைய ெஷட்டர்களை மாற்ற, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று புதிய ெஷட்டர்கள் அமைத்து அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தண்ணீர் வீணாகாமல், பாசனத்திற்கும், நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கும் வழி செய்யப்படும்' என்றார். நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.