/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் கலெக்டர் ஆய்வு
/
பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் கலெக்டர் ஆய்வு
பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் கலெக்டர் ஆய்வு
பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 29, 2025 08:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மற்றும் நாகலுாரில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக சமூக நீதி விடுதிகள் உள்ளது. இதில், கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். அதில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, பொருட்களின் இருப்பு விபரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும், விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள், கல்வி திறன் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும். விடுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை விடுதிகளை மேம்படுத்திட வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.