/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க மனுக்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

ADDED : டிச 20, 2024 05:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து கலெக்டர் கள ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்களில் மொத்தம் 30 ஆயிரத்து 399 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களின் உறுதித் தன்மைக் குறித்து கலெக்டர் பிரசாந்த் கள ஆய்வு செய்தார்.
சின்னசேலம் அடுத்த தொட்டியம், தென்பொன்பரப்பி, அம்மையகரம், வாணாபுரம் வட்டம், பாசார், அய்யனார்பாளையம், பங்காரம் ஆகிய கிராமங்களில் பெறப்பட்ட மனுக்கள் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சரிபார்த்து ஆய்வு செய்தார்.
தாசில்தார்கள் சின்னசேலம் மனோஜ்முனியன், வாணாபுரம் பாலகுரு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.