/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு
/
கல்லுாரிக்கு தற்காலிக இடம் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 31, 2025 12:43 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் புதிய அரசு கல்லுாரிக்கு தற்காலிக இடம் தேர்வு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டையில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டையில் தற்காலிக இடத்தில் புதியதாக அரசு கல்லுாரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கலெக்டர் பிரசாந்த், உளுந்துார்பேட்டை வட்டார வளமைய அலுவலகமாக செயல்பட்டு வரும் கட்டட வளாகத்தில் புதியதாக அரசு கலைக் கல்லூரி துவங்குவதற்கு உரிய இடம் தேர்வு செய்வது குறித்து பார்வையிட்டார்.
அப்போது மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் டேனியல்ராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.