தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஆய்வு

 தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஆய்வு

 தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 15, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சியுடன், தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது உள்ளிட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி, திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தேர்தல் அலுவலர் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார். உதவி தேர்தல் அலுவலர்கள் சரவணன், செல்வமூர்த்தி முன்னிலை வகித்தனர். முகாமில் 1584 ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட 330 ஓட்டுசாவடி மையங்களில் பணியாற்ற உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள், பயிற்சி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், தங்களது தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரியான ஷேக் அப்துல் ரகுமான், தேர்தல் செலவின மேற்பார்வையாளர் சுமித்தாஸ் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி நேரில் ஆய்வு செய்தனர். ஏற்பாடுகளை தேர்தல் துணை வட்டாட்சியர் சுதாகர், தாலுகா அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us