/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வுகான கலெக்டர் அறிவுறுத்தல்: சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை
/
விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வுகான கலெக்டர் அறிவுறுத்தல்: சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை
விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வுகான கலெக்டர் அறிவுறுத்தல்: சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை
விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வுகான கலெக்டர் அறிவுறுத்தல்: சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் ஆலோசனை
ADDED : ஜூலை 26, 2024 04:52 AM

கள்ளக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில், விபத்துகளை தடுக்கும் பொருட்டு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி.,ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் எதிர்பாராத சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வட்டாரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் குறித்து காவல் துறையால் அடையாளம் காணப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தியவாறு அவ்விடங்களில் நேரடி ஆய்வு செய்த விவரங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
அதில் விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை குறியீடுகள், மின் விளக்கு வசதிகள், உயர்மின் கோபுர மின் விளக்குகள், சாலை பாதுகாப்பு தடுப்புகள், போக்குவரத்து சிக்னல்கள், போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் கூடுதல் மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் ஒளிரும் விளக்குகள் பொருத்த வேண்டும். முக்கியமாக விபத்துக்கான இடங்களில் எச்சரிக்கை குறியீடுகளை வரைதல் மற்றும் தவகல் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட விபத்து தடுப்பு பணிக்கு தற்காலிக தீர்வு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விபத்துகளை நிரந்தரமாக தடுக்கும் பொருட்டு நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

