/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : அக் 16, 2024 04:05 AM
கள்ளக்குறிச்சி : மழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலைப் பயிர் தோட்டங்களில் தயாராக உள்ள பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். மா, கொய்யா மற்றும் இதர பழப்பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுபோன கிளைகளை அகற்றி, கவாத்து செய்து, மரத்தின் சுமையை குறைத்து மழை மற்றும் புயல் காற்றிலிருந்து பாதுகாக்கலாம்.
மழை நீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து மழை நீர் வெளியேற்றிட வேண்டும். காய்கறி பயிர்களில் காய்ந்துபோன இலைகளை அகற்ற வேண்டும்.
இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். வாழையில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை பயன்படுத்தி ஊன்றுகோல் அமைத்திட வேண்டும்.
பசுமைக்குடில் மற்றும் நிழல்வலை கூடாரத்தின் அடிப்பாகம், பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமைக்குடிலினை சுற்றி உயர் வேலி அமைத்திட வேண்டும். இதனை விவசாயிகள் உரிய முறையில் கடைப்பிடித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.