/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ADDED : ஆக 04, 2025 11:29 PM

கள்ளக்குறிச்சி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போக்சோ சட்டம், சிறார் நீதி சட்டம், குடும்ப வன்முறை சட்டம் மற்றும் மாவட்ட அளவிலான நாஷா முக்த் பாரத் அபியான் மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிற துறைகளுடன் இணைந்து உடனடியாக மறுவாழ்வு அளித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பள்ளியில் சேர்வதற்கு வழிவகை செய்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவித்தல், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றுவதுடன், தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.