/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : நவ 23, 2024 06:45 AM

கள்ளக்குறிச்சி : குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வகையில் சத்தான உணவு வழங்க வேண்டும் என பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த புத்தமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார். அதில் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, வயதிற்கேற்ப எடை மற்றும் உயரம், தினசரி ஒரு குழந்தையின் உணவு அளவு, இணை உணவு அளவு, கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் மருத்துவ விவரம், வளர்ச்சி கண்காணிப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்தார்.
பின் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், 'மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 1,162 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 32 ஆயிரத்து 594 முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் உள்ளனர்.
அதேபோல் 9,144 கர்ப்பிணி பெண்கள், 8,569 பாலுாட்டும் தாய்மார்கள் உள்ளனர். அங்கன்வாடி மையங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் எடை மற்றும் உயரம் நிலை குறித்து கண்டறியப்படுகிறது.
சரியான எடை உள்ள ஆரோக்கியமான குழந்தையே நாட்டின் எதிர்காலம் ஆகும்.
எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வகையில் சத்தான உணவுகளை வழங்க வேண்டும்' என்றார்.
பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ஜெயராமன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.