/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிலுவை பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
நிலுவை பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 28, 2025 12:54 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் துறை வாரியாக உள்ள நிலுவை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசின் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து துறை வாரியாக நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்கவும், மானியக் கோரிக்கை அறிவிப்பு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.