/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரவள்ளி, வெங்காயம், கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
/
மரவள்ளி, வெங்காயம், கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
மரவள்ளி, வெங்காயம், கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
மரவள்ளி, வெங்காயம், கத்தரி பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : நவ 16, 2025 11:40 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள், மரவள்ளி, வெங்காயம், கத்தரி பயிர்களை காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் ராபி 2025 பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் மரவள்ளி, கத்தரி, வெங்காயம் ஆகிய தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு 2025--26ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்திட ஷேமா ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 5 சதவீத பிரீமியம் தொகை ரூ.1,528, காப்பீட்டு தொகை ரூ.30,578, இதற்கான கடைசி நாள் 2026 பிப்.28 ஆகும்.
சின்னவெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு 0.35 சதவீத பிரீமியம் தொகை ரூ.63, காப்பீட்டு தொகை ரூ.18,228, கடைசி நாள் 2026 ஜன.31 ஆகும்.
கத்தரி பயிருக்கு ஏக்கருக்கு 5 சதவீத பிரீமியம் தொகை ரூ.854, காப்பீட்டு தொகை ரூ.17,092, கடைசி நாள் 2026 ஜன.31 ஆகும்.
பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் எடுத்து வர வேண்டும்.
விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவைகள் மூலம் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அல்லது மத்திய அரசின் தேசிய பயிர் காப்பீடு வலைத்தளம் (http://www.pmfby.gov.in/) பயிர் காப்பீடு செயலியை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

